அரசியல் அநாதைகளாக
அடிமைச் சாசனத்துக்குள்
அடங்கி கிடந்தவர்களுக்கு
விடுதலை பெற்றுத்தந்த
மாவீரன் நீங்கள்...!!
தூங்கிக் கிடந்த சமூகத்தை
தூக்கி நிமிர்த்தி
நெஞ்சுர மூட்டி
நிமிர்ந்து நிற்கவைத்தவர் நீங்கள்...!!
வாய் மூடி
மௌனித்திருந்தவர்களை
தட்டிக் கொடுத்து
பேச வைத்தவர் நீங்கள்...!!
உரிமைக்காக
உரக்க கூவி
பச்சை என்றும்
நீலம் என்றும்
பிரிந்து கிடந்தவர்களை
ஒன்று கூட்டி
மர நிழலில்
அமரச் செய்தவர் நீங்கள்...!!
தடைகள் கண்டு
தயங்காது
தகர்த்தெறிந்து
தன்னினத்தின் இருப்பை
தக்க வைத்து
தடம் பதித்தவர் நீங்கள்...!!
நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த ஆண்டு
நாட்டுக்கு மட்டுமா சுதந்திரம் கிடைத்தது
எங்களுக்குந்தான் உங்களால்...!!
முஸ்லிம் சமூகத்திற்கு
சுதந்திரம் பெற்றுத்தரத்தான்
இவ்வாண்டில் நீங்கள் பிறந்தீர்களோ...?
இருண்டு கிடந்த கிழக்கிற்கு
ஒளியாய்வந்து வெளிச்சம்
கொடுத்தவர் நீங்கள்
உங்கள் ஒளியால்
நாடெல்லாம் விடியத் தொடங்கியது...!!
சட்டத்தை
கண்டு பயந்தவர்கள்
நிறையப் பேர்
ஆனால்
சட்டம் உங்களை
கண்டு பயந்தது
என்பதுதான் உண்மை வரலாறு...!!