யுத்தம் தொடர்பிலும் சமாதானம் சம்பந்தமாகவும் தனது ஆட்சிக்காலத்தில் குழப்பிகொள்ளவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெருமிதம் கொண்டுள்ளார்.
நாங்கள் அதிகாரத்தில் இருந்த காலத்தில் ஒரு இலக்குடனே செயற்பட்டோம் எனவும் எமது அரசாங்கம் இரண்டு பக்கம் இழுப்பட்டதில்லை என்றும் குறிப்பிட்டார். யுத்தம் என்றால் யுத்தம், சமாதானம் என்றால் சமாதானம் என்ற கொள்கையிலேயே செயற்பட்டோம் எனவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.