அப்துல்சலாம் யாசீம்-
ஜேர்மன் நாட்டின் பிரபல பல்கலை கழகத்தில் இடம் பெறவுள்ள மாற்று சக்தி வள பயன்பாடு தொடர்பான செயலமர்விற்காக கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.எஸ்.அபே குணவர்தன இன்றிரவு (22) பயணமாகவுள்ளதாக பிரதம செயலக அலுவலக பே்சாளரொருவர் தெரிவித்தார்.
மாற்று சக்தி வள பயன்பாட்டில் ஜேர்மன் எவ்வாறு அதனை கையாளுகின்றது என்பது பற்றிய அறிவினை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் ஒரு வார பயிற்சிக்காக செல்லவுள்ளதாகவும் கிழக்கு மாகாணத்தில் இவ்வாறான செயற்திட்டங்களை ஆரம்பித்து செயற்படுத்துவது தொடர்பாக ஆராயவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.