சிங்கள-முஸ்லிம் குழப்பங்களை உருவாக்கி வடக்கு-கிழக்கை இணைக்க வெளிநாட்டுச் சக்திகள் முயற்சி - அதாஉல்லாஹ் சீற்றம்

ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
'வடக்கு- கிழக்கு இணைப்பென்பது இந்தியாவுக்கும், நோர்வேயிற்கும், அமெரிக்காவிற்கும் தேவையான ஒன்றாகும். வடக்கு யாருக்கும் தேவையில்லை. ஆனால் கிழக்கு எல்லோருக்கும் வேண்டும். அதிலும் கிழக்கிலுள்ள திருகோணமலைத் துறைமுகம் எல்லோருக்கும் தேவைப்படுகிறது. இதனால் வடக்கு கிழக்கை இணைக்க வேண்டுமென்று யோசிக்கிறார்கள். எப்படியாவது சிங்கள முஸ்லிம் குழப்பங்களை உருவாக்கி, சிங்களவர்களோடு சேர்ந்து வாழ முடியாது. அதனால் தமிழர்களும் முஸ்லிம்களும் சேர்ந்து வடக்கு கிழக்கை இணைப்போம் எனும் நிலைக்கு முஸ்லிம்களை இட்டுச் செல்ல நோர்வே, அமெரிக்கா, இந்தியா போன்ற சக்திகள் திட்டங்களைத் தீட்டி, இங்குள்ள தரகர்கள் முலம் செயற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். சமூகங்களில் அக்கரை கொண்ட அரசியல் தலைமைகள் இதனைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது'

என்று முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் தெரிவித்தார்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் இப்றான்சா பௌறுதீனை பிரதம ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் 'நிஜம்' சஞ்சிகை வெளியீட்டு விழா நேற்று அக்கரைப்பற்று பிரதான வீதியருகில் அமைக்கப்பட்ட அலங்கார மேடையில் இடம்பெற்றது.

பிரபல நாடகக் கலைஞர் கலைச் செல்வன் றவூப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேசியக் காங்கிறஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, சிறப்பித்தார்.

மேலும், இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹ னைஸ் பாறூக், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர்களான எம்.எஸ்.உதுமாலெவ்வை, எம்.எஸ் சுபையீர், லேக்ஹவுஸ் தமிழ் வெளியீடுகளின் அலோசனைப் பணிப்பாளர் எம்.ஏ.எம்.நிலாம், அறிஞர் சித்திலெவ்வை மன்றத் தலைவர் சட்டத்தரணி.மர்ஸ ம் மௌலானா, கிழக்கின் எழுச்சி செயலாளர் அஸ்ஸ ர் சேகு இஸ்ஸதீன், அஸீஸ் மன்றத் தலைவர் அஷ்றப் அஸீஸ் உள்ளிட்ட அறிஞர்கள் பலரும், பெருந்திரளான மக்களும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அஸீஸ் மன்றத் தலைவர் அஷ்றப் அஸீஸ் இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ்வினால் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -