இறக்குவானையில் முஸ்லிம் மாகா வித்தியாலயம் வரலாற்று சாதனை..!

அபு அலா - 
ரத்தினபுரி மாவட்ட எம்பிலிப்பிட்டி கல்வி வலய இறக்குவானை அஸ்ஸலாம் முஸ்லிம் மாகா வித்தியாலத்தில் இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் 20 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக குறித்த பாடசாலையின் அதிபர் ஏ.ஜே.எம்.ஹபீல் இன்று (09) தெரிவித்தார்.

இப்பாடசாலையில் 72 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றியதில் 20 மாணவர்களே சித்தியடைந்துள்ளனர். ஏனைய மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். 

இந்த அடிப்படையில் இரத்தினபுரி மாவட்டத்தில் இரண்டாம் நிலை சித்தியை பி.சஹிட் யூனுஸ் மற்றும் எம்.என்.எப்.நுஹா ஆகிய இரு மாணவர்களும் 174 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

எப்.எப்.பஹ்மா - 170, 
ஏ.ஜே.எம்.அஸ்கான் - 167, 
எம்.ஏ.அஹமட் - 167, 
எம்.எச்.எப்.அஸ்லினா - 166, 
எம்.ஐ.எஸ். சலிஹா - 166, 
கே.ஈ.சனோக் - 165, 
எம்.ஏ.முஹம்மட் - 163, 
எம்.என்.எப்.சிதானா - 160, 
எப்.எப்.ஹப்ஸா - 159, 
எம்.என்.எம்.றிக்காஸ் - 159, 
எம்.ஏ.எப்.ஆக்கிப் - 159, 
எம்.என்.எம்.நஸாட் - 156, 
கே.அமிர்தா - 154, 
எம்.ஆர்.எம்.மஹ்மூத் - 155, 
எஸ.எப்.சிபானா - 154, 
எம்.ஆர்.எப்.தஹாறா - 154, 
எஸ்.அனோஜன் - 153, 
எஸ்.எச்.ஆத்திப் - 151 ஆகிய மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். 


இந்த சித்திக்கு வழி வகுத்த ஆசிரியர் எம்.கே.எம்.முஸாதீக் மற்றும் ஏனைய ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், பாடசாலை அபிவிருத்தி சங்க குழுவினர்களுக்கும், பழைய மாணவ சங்க உறுப்பினர்களுக்கும் இம்மாணவர்களுக்காக தனிப்பட்ட ரீதியில் உழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் எனது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இவ்வலயத்தில் காணப்படுகின்ற பாடசாலைகளில் இறக்குவானை அஸ்ஸலாம் முஸ்லிம் மாகா வித்தியாலயம் மாத்திரமே முஸ்லிம் பாடசாலையாக காணப்படுகின்றமையும், இப்பாடசாலை 70 ஆண்டு நிறைவும் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -