வட பகுதியில் நடைப்பெற்று வரும் சமூக விரோத செயல்களை தடுக்கும் வகையில் மூன்று விஷேட பொலிஸ் குழுக்களை பொலிஸ் மாஅதிபர் நியமித்துள்ளார்.
இந்த பொலிஸ் குழுக்கள் சமூகவிரோத செயல்களுடன் தொடர்புபட்டவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என பொலிஸ் தினைக்களம் தெரிவித்துள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின்படி கோப்பாய் மானிப்பாய் சுன்னாகம் பகுதியில் குறித்த குழுவினர் நடமாற்றம் அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே பொலிஸ் அதிகாரிகளின் சகல விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.