மத்திய வங்கி முறிகள் விற்பனை தொடர்பான கோப் அறிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க தவிர்ந்த ஏனைய அனைத்து கோப் குழு உறுப்பினர்களும் கையொப்பமிட்டுள்ளனர்.
கோப் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போது இது தொடர்பாக கோப் குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
வெளிநாடு சென்றிருந்ததால் குறித்த அறிக்கையில் கையொப்பமிட முடியவில்லை எனவும், எனினும் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதாக தொலைபேசி மூலம் அறிவித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இது தொடர்பாக தெரிவித்துள்ளார்.