யாழ் பல்கலைக்கழக துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக உண்மையைக் கண்டறியும் விசாரணைகள் இடம்பெறவேண்டும் யாழ் முன்னாள் மாநகர சபை உறுப்பினரும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட மக்கள் பணிமனைத் தலைவருமான மௌலவி பி.ஏ.எஸ் சுப்யான் தெரிவித்துள்ளார்.
கொக்குவில் குளப்பிட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை(21) அன்று இரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டுசம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக முன்னுக்குப்பின் முரணான தகவல் ஆரம்பத்தில் வெளிவந்த பொழுதிலும் தற்போது ஒருவர் துப்பாக்கிச் சூட்டினாலேயே உயிர் இழந்துள்ளார் என்பது வைத்திய பரிசோதனையில் நிரூபனமாகியுள்ளது.
எனவே இதனை மூடி மறைக்க யாருக்கும் அனுமதிக்கக் கூடாது. இதில் வேறு ஏதேனும் உள் நோக்கங்கள் உண்டா? என்ற மக்களின் சந்தேகத்திற்கு தெளிவான விடை விரைவாகக் கிடைக்கவேண்டும் .
எனவே இச்சம்பவம் பல்கலைக்கழக மாணவர்கள் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.
எனவே துரிதமான விசாரணை செய்து உண்மையைக் கண்டறிந்து யார் குற்றவாளியாக இருந்தாலும் எவ்வித பாகுபாடுமின்றி தண்டிக்கப்படவேண்டும்.
எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மாஅதிபரையும் ஜனாதிபதி மற்றும் பிரதமரையும் வேண்டிக் கொள்வதுடன் மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.