க.கிஷாந்தன்-
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளத்தை வலியுறுத்தி தமிழ் முற்போக்குக்கூட்டணி நாளை தலவாக்கலையில் ஏற்பாடு செய்திருந்த கவனயீர்ப்புப் போராட்டம் தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளம் 620 ரூபாவிலிருந்து 730 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் ஜோன்செனவிரட்ன இன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்தே நாளை தலவாக்கலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவனயீர்ப்பு போராட்டம் தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.