பொதுவாக மூதூர் பிரதேசம் கல்வியில் பின்தங்கி இருந்தாலும் அன்மைக் காலமாக கல்வியில் பாரிய வளர்ச்சி கண்டு வருவதனை காணக் கூடயதாக உள்ளது.
2014, 2015 ம் ஆண்டைய காலப்பகுதியில் நடைபெற்ற தேசிய ரீதியான உற்பத்தித்திறன் போட்டியில் மூதூர் கல்வி வலயம் இரண்டாம் இடம் பெற்றதுடன்
இம்முறை வெளியான தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் 132 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளது மிகவும் பாராட்டத்தக்கது.
இது 2015 ம் ஆண்டை விட சுமார் 50 அதிகரிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இதற்காக கடந்த காலத்தில் பரீட்சைத்திணைக்களத்தால் நடாத்தப்பட்ட கேள்விகளை பகுபபாய்வு செய்து சுழச்சி முறையில் பல பரீட்சைகள் மூதூர் கல்வி வலயத்தால் நடாத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்காக உழைத்த மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் எம். கே. எம். மன்சூர் சேர் மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் , உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் , மூதூர் வலய ஊழியர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் , மாணவர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் மூதூர் மக்கள் பலகோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.
மூதூர் நிருபர்-
றபீக் சர்றாஜ்.