மூதூர்.பாலத்தடிச்சேனை அமரர் ஜீ.எம். பரம்சோதி அவர்களின் 09வது நினைவு நாளை முன்னிட்டு கவிஞர் பரம்சோதி கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் 'நாங்கள் விட்டில்கள் அல்ல'' எனும் கவிதை நூல் வௌியீட்டு விழா இன்று (22) பிற்பகல் 3.00மணியளவில் சென்ஜோசப் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் வௌியீட்டு வைக்கப்பட்டது.
இந்நூல் வௌியீட்டு விழாவிற்கு இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா.பாராளமன்ற உறுப்பினர்களான பசீர் சேகுதாவூத். கே.துறைரெட்ணசிங்கம். கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.நாகேஸ்வரன் மற்றும் திருகோணமலை காளி கோயில் பிரதம குரு சிவசிறி கோ.இரவிச்சந்திர குருக்கள் சமூக ஆய்வாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதில் முதலாவது பிரதியினை திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கலாநிதி நோபல் இம்மானுவேல் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் கையளித்தார்.
அதனையடுத்து இரண்டாவது பிரதியினை பாராள மன்ற உறுப்பினர் பசீர் சேகுதாவூதுக்கும் மூன்றாவது பிரதியினை திருகோணமலை மாவட்ட பாராள மன்ற உறுப்பினர் கே.துறைரெட்ணசிங்கத்திற்கும் வழங்கி வைத்தார்.