வகைப்படுத்தப்பட்ட குப்பை கூளங்களை மட்டும் சேகரிக்கும் வேலைத்திட்டம்.






மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பயிஸர் முஸ்தபா அவர்களது யோசனைக்கு இணங்க 2016 நவம்பர் மாதம் முதல் சிதைந்த மற்றும் சிதையாத குப்பைகளை மட்டும் சேகரிக்க அனைத்து மா நகர சபைகளும் தீர்மானித்துள்ளன. இவ்வேலைத்திட்டம் நவம்பர் முதலாம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி இல்லத்தில் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. மேலும் வகைப்படுத்தப்படாத குப்பை கூளங்கள் அக்கட்டப்படாது எனவும் அவ்வாறு அகற்றப்படாமல் இருந்தால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொது மக்கள் இது தொடர்பில் 119 இலக்கத்திட்கு அழைத்து முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் அல்லது dir.enviroment@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு புகைப்படம் மூலம் முறையிடலாம் என போலீஸ் சுற்றுச்சூழல் பிரிவின் பணிப்பாளர்சி ரேஷ்ட போலீஸ் உத்திகத்தர், எச்.எச். சூலசிறி தெரிவித்தார்.


Regarding;
Mafeer Ashraff
Ministry of provincial councils and local government
0112441347
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -