நாட்டில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவதாகவும் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் தெரிவித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு எதிர்வரும் 10 ஆம் திகதி ஐ.நா. வின் விசேட பிரதிநிதி ரீடா அய்சக் இலங்கை விஜயம் செய்யவுள்ளார்.
இவர் சுமார் 10 நாட்கள் நாட்டில் தங்கியிருந்து இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது, வட மாகாணத்துக்குச் சென்று முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் பிரதிநிதிகள் என்பவர்களைச் சந்திக்கவுள்ளார்.
இவர் இவ்வாறு மேற்கொள்ளும் விசாரணை தொடர்பிலான அறிக்கையை, எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத்தின் போது சமர்ப்பிக்கவுள்ளார்.