அபு அலா, சப்னி அஹமட்-
அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று (12) அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ் தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் இடம்பெற்ற தீர்வுகள்;
2016 ஆம் ஆண்டின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்தொட்ட நிதி ஒதுக்கீட்டின் 600 புதிய பொலிஸ் நிலையங்களை அமைப்பதற்கு அரசங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கேற்ப அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுல் உள்ள ஒலுவில் பிரதேசத்தில் தென்கிழக்கு பல்கழைக்கழகம், ஒலுவில் துறைமுகம் மற்றும் வெளிச்ச வீடு ஆகிய பிரதேசங்களை அண்டியதாக புதிய பொலிஸ் நிலையம் ஒன்றை அமைப்பதற்கு அரச காணிகளை ஒதுக்க வேண்டும் என்று அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அப்பிரதேச பிரமுகர்களினால் நிராகரிக்கப்பட்டு ஒலுவில் பிரதேசத்தில் காணிகள் இல்லை எனவும் மறுக்கப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு பொலிஸ் நிலைய காணியை பெற்றுக்கொள்வது தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல் ஜெமீல் மற்றும் பிரதேச உதவிச்செயலாளர் ரீ.ஜெ. அதிசயராஜ் ஆகியோரின் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு இதற்கான அறிக்கையை ஒரு வார காலத்திற்குள் முடிக்க வேண்டும் என ஒருங்கிணைப்பு குழு தவிசாளரும் சுகாதார பிரதியமைச்சருமான பைஷல் காசீமினால் பணிப்புரை வழங்கி வைக்கப்பட்டது,
அது போல் அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலத்திற்கான மீனோடைக்கட்டு டாக்டர் ஜலால்தீன் வித்தியாலய காணியை பெற்றுக்கொள்வது தொடர்பான கோரிக்கைக்கு அக்கரைப்பற்று கல்வி வலய பணிப்பாளர் ஏ.எல். ஹாசீமினால் நிராகரிக்கப்பட்டது. இது தொடர்பான மிக அவசரமான கூட்டம் இன்று (12) இரவு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தலைமையில் இடம்பெவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அட்டாளைச்சேனை மீன் சந்தையை இடமாற்றுவது தொடர்பான கோரிக்கைக்கு மிக விரைவில் தீர்வு வழங்கி வைக்கப்படும் என ஒருங்கிணைப்பு குழு தெரிவித்தனர்,
கோணத்தை ஆற்றின் ஆரம்பத்தில் ஆற்றுக்கு குறுக்கே நீர் கதவும் , நீர் பம்பி ஒன்றையும் அமைப்பதுடன் கோணவதை நடை பாலத்தில் நீர் மட்டத்தில் உள்ள நீர் பகிர்வு குழாயை அகற்றி நீர் மட்டத்திற்கு மேலால் பதித்தல், கோணவத்தை ஜும்மா பள்ளிவாயல் நிர்வாக எல்லைக்கு தனியானதொரு முஸ்லிம் விவாக பதிவாளர் பிரிவை ஏற்படுத்தல், திவிநகமுக அபிவிருத்தி திணைகளத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் இவ்வாண்டு நடைமுறைப்படுத்தும் ஏனைய திட்டங்களான காடு வளர்ப்பு, நடமாடும் விற்பனை நிலையம் மற்றும் பயிற்சி நெறிகள் போன்றவற்றினை நடைமுறைப்படுத்தல்,
நிவிநகமுக அபிவிருத்தி திணைக்களத்தினால் அட்டாளைச்சேனை பிரதேச ஏதாக பிரிவுக்கு திவிநகமுக வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக ரூபா 9 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இந்நிதியின் மூலம் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப்பிரிவில் வைக்கும் தெரிவு தெரிவு நெய்யப்பட்ட வருமானம் குறைந்த 21 பயிலுனர்களுக்கு கணரக வாகனங்களை இயக்குவதற்கான பயிற்சி நெறிகளை வழங்குதல், பாலமுனையில் அமைந்துள்ள விவசாய பாடசாலைக்கு புதிதாக வழங்கப்பட்டுள்ள காணியில் மண்ணிட்டு நிரப்புவதற்கு அனுமதி பெறல் போன்றவற்றிற்கு தீர்வு வழங்கிவைக்கப்ப்ட்டது.