ஏன் இலங்கையில் தமிழர்களின் உரிமையும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட முடியாது

இணைந்த வட கிழக்கில் முஸ்லிம்களின் உரிமைகளும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் என்றும் முஸ்லிம்களுக்கு எதுவித அநீதியும் இழைக்கப்பட மாட்டாது; என்றும் திரு சம்பந்தன் ஐயா அவர்கள் இன்றைய ஊடகங்களில் உத்தரவாதமளித்திருக்கின்றார். இவற்றை திரு சம்பந்தன் அவர்கள் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்துவாரா? அல்லது த. தே. கூ உறுதிப்படுத்துமா? அல்லது அல்லது அரசியலமைப்புச் சட்டத்தினூடாக உறுதிப்படுத்தப்படுமா?

அரசியலமைப்புச் சட்டத்தினூடாக முஸ்லிம்களின் உரிமைகளை, பாதுகாப்பை உறுதிப்படுத்தப்பட முடியுமானால் அதிகாரப் பகிர்வுக்குப் பதிலாக, அதே அரசியலமைப்புச் சட்டத்தினூடாக தமிழர்களின் பாதுகாப்பை, உரிமைகளை ஏன் உறுதிப்படுத்த முடியாது? என்ற கேள்விக்கு சம்பந்தன் ஐயாவின் பதிலென்ன ? தமிழர்களின் பாதுகாப்பை, உரிமைகளை இலங்கை அரசு அரசியலமைப்புச் சட்டத்தினூடாக உறுதிப்படுத்த முடியாது ஆனால் முஸ்லிம்களின் உரிமைகளை வட கிழக்கு 'தமிழ் அரசு' அரசியலமைப்புச் சட்டத்தினூடாக உறுதிப்படுத்தும் ; எனவே முஸ்லீம்கள் வட கிழக்கு இணைப்பிற்கு இணங்க வேண்டும்; என்பது எந்த வகையில் நியாயம். அல்லது தனிப்பட்ட முறையில் திரு சம்பந்தன் அவர்களோ அல்லது த. தே. கூட்டமைப்போ உறுதிப் படுத்தும், என்பது அறிவுடமை ஆகுமா, என்பது ஒருபறமிருக்க, அதே உத்தரவாதத்தை ரணிலோ, மைத்திரியோ தந்தால் அதிகாரப்பகிர்வுக் கோரிக்கையை அவர்கள் கைவிடுவார்களா? கடந்தகால, சம கால அனுபவங்கள்தான் எங்களை அதிகாரப் பகிர்வைக் கோரவைக்கின்றது; என்று நீங்கள் கூறலாம். அதே கடந்தகால, சமகால அனுபவங்கள்தான் அதிகாரப் பகிர்வு தொடர்பாக எங்களை அச்சப்பட வைக்கின்றது; என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் .

அதுமட்டுமல்லாமல் யாழில் நடைபெற்ற இரு மாணவர்களின் கொலையைத் தொடர்ந்து அதிகாரப் பகிர்வின் மூலமே வட கிழக்கில் பாதுகாப்பை உறுதிப்படுத்தப்பட முடியும்; என்று திரு சம்பந்தன் ஐயா தெரிவித்திருக்கின்றார். அந்தக் கொலையை நாமும் கண்டிக்கின்றோம். 

ஆனால,கிழக்கிற்கு வெளியே வாழுகின்ற முஸ்லிம்களது உரிமை, பாதுகாப்பு அதே அதிகாரப்பகிர்வின் மூலம் பாதுகாக்கப்படுமா? அல்லது மேலும் அதல பாதாளத்திற்குள் தள்ளப்படுமா? திரு சம்பந்தனின் பதில் என்ன? வடக்கில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழுகின்றார்கள் . எனவே அதிகாரம் அவர்களின் கைகளுக்குச் செல்லும் . கிழக்கிற்கு வெளியே வாழுகின்ற முஸ்லிம்களைப் பொறுத்தவரை அதிகாரம் யாரின் கைகளுக்கு செல்லும் . போதாக்குறைக்கு கிழக்கில் மாத்திரம் பெரும்பான்மையாக இல்லாவிட்டாலும் சிறுபான்மை இல்லை என்கின்ற நிலையில் வாழுகின்ற முஸ்லிம்களை வட கிழக்கை இணத்து இங்கும் சிறுபான்மையாக்கி ஒன்பது மாகாணங்களிலும் அடிமைச் சமூகமாக முஸ்லிம்கள் வாழ, அதே நேரம் இணைந்த வட கிழக்கில் ஆளும் சமூகமாக தமிழர்கள் வாழ்ந்து ஆளப்படுகின்ற ஒரு அடிமைச் சமூகமாக கிழக்கிலும் முஸ்லிம்களை மாற்ற முற்படுவது மனித தர்மமாகுமா?

துரதிஷ்டவசமாக அதிகாரப் பகிர்வு என்பது முஸ்லிம் சமூகத்தின் மீது எழுதப்படப் போகின்ற அடிமைச் சாசனம், என்பதை புரிந்துகொள்ள முடியாத முஸ்லிம் கட்சித் தலைமைத்துவங்களை வைத்துக் கொண்டு முஸ்லிம் சமூகம் தூங்கிக் கொண்டிருக்கின்றது. அந்த தலைமைத்துவங்களால் புரிந்து கொள்ள முடியாது, ஏனெனில் அவர்கள் முஸ்லிம் கட்சித் தலைமைத்துவங்களே தவிர முஸ்லிம்களின் தலைமைத்துவங்கள் அல்ல. எனவே, திரு சம்பந்தன் ஐயா அவர்களே! நாங்கள் தலமைத்துவமில்லாத ஒரு சமூகம் , தயவு செய்து எங்கள் மீது சவாரி செய்ய முற்பட வேண்டாம் . ஒரு சமூகத்தின் வாழ்வு இன்னுமொரு சமூகத்தின் அழிவில் அல்லது அடிமை வாழ்வில் மலரவேண்டாம்; என்று வேண்டுகின்றேன்.

YLS ஹமீட்
செயலாளர் நாயகம்
அ இ ம கா
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -