சர்ச்சையானது ஜெயலலிதாவின் கையெழுத்து - நடந்தது என்ன..?

முதல்வரும் அ.தி.மு.க பொதுச்செயலருமான ஜெயலலிதா அ.தி.மு.க வேட்பாளர்களின் வேட்புமனுவில் பெருவிரல் ரேகை வைத்ததால் அந்த வேட்புமனுக்கள் செல்லாது என மூத்த வழக்கறிஞர் துரைசாமி விளக்கம் அளித்துள்ளார். அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான அ.தி.மு.க வேட்பாளர்கள் வெள்ளிக்கிழமையன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர். அதில் வேட்பாளர்களை அங்கீகரிக்கும் வகையில் அ.தி.மு.க பொதுச்செயளாலர் என்ற வகையில் படிவத்தில் முதல்வர் ஜெயலலிதா பெருவிரல் ரேகையை பதிந்திருந்தார்.

இது தொடர்பாக விளக்கம் அளித்திருந்த தேர்தல் ஆணையம், கையெழுத்திட இயலாத நிலையில் உள்ள ஒருவர் வேட்புமனுவில் பெருவிரல் ரேகை வைக்கலாம் என விளக்கம் தந்திருந்தது. 

இதனால் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் இல்லை என கூறப்பட்டது. ஆனால் மூத்த வழக்கறிஞர் துரைசாமியோ, வேட்பு மனு படிவம் ஏ-யில் போட்டுள்ள கையெழுத்தும் படிவம்-பி-யில் போட்டுள்ள கையெழுத்தும் ஒன்றாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அதிமுகவின் இரட்டை இலை சின்னம் கிடைக்கும். தற்போது பி படிவத்தில் கைரேகை வைக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுகவினரின் வேட்புமனுக்களே செல்லாது; அத்துடன் ஜெயலலிதாவின் பெயரை கையால் எழுதாமல் டைப் செய்திருப்பதும் கூட சட்டப்படி தவறானதே என்கிறார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -