தொலைபேசி ஒட்டுக் கேட்டல் விவகாரம் தொடர்பில் முறைப்பாடு செய்தால் விசாரணை நடத்த முடியும் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நீதவான்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இது தொடர்பில் உத்தியோகபூர்வ அடிப்படையில் முறைப்பாடு செய்யப்பட்டால் அந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட முடியும் என அமைச்சர் நேற்றைய தினம் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றின் சுயாதீன தன்மையை பாதுகாப்பது என்பது அரசாங்கத்தின் கொள்கைகள் கோட்பாடுகளில் ஒன்று என அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே சுயாதீன அடிப்படையில் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தப்பட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.