அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு அரசியல் பாகுபாடு இருக்கக் கூடாது - மாகாண அமைச்சர் நஸீர்

அபு அலா, சப்னி அஹமட்-
க்களின் தேவைகளுக்காகவே மக்கள் பிரதிநிதிகளும், அரச அதிகாரிகளும், உத்தியோகத்தர்களும் உள்ளனர் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார். 

அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று (12) அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எம். அப்துல் லத்தீப் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே மேற்கண்டவாறு கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்; 

அக்கரைப்பற்று பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களுக்கு கிழக்கு மாகாண எதிர்க்கட்சித்தலைவர் எ.எம்.எஸ் உதுமாலெப்பை தடையாக இருக்கக்கூடாது. இதற்கு நீங்கள் ஆதரவாக இருக்க வேண்டுமே தவிர எதிராக செயற்படக்கூடாது. மக்களுக்காக செய்யப்படுகின்ற அபிவிருத்தித்திட்டங்களில் அரசியல் உள்நோக்கோடு நீங்கள் செயற்பட்டு பிரதேச வாதம் பேசி வருகின்றீகள். இந்த மனநிலையிலிருது நீங்கள் முதலில் விடுபடவேண்டும் என்றார்.

அக்கரைப்பற்றில் புதிதாக கட்டப்படவுள்ள நூதனசாலை மற்றும் மாவட்ட சமூக சேவைகள் திணைக்களத்தின் கட்டிடம் நிர்மானம் தொடர்பான கலந்துரையாடலின்போதே அமைச்சர் தெரிவித்தார். 

மீராநகர் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு 8 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கான சகல முன்னெடுப்புக்களும் முன்னெடுத்து வருவதாகவும் கூறினார்.

மீராநகர் ஆயுர்வேத வைத்தியசாலை, முதல்வர் தவம் விளையாட்டு மைதானம், பிரதேச சபைக்கு தளபாடங்கள், மின்சார சபையின் செயற்பாடுகள், மாநகர சபையின் செயற்பாடுகள், பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பில் ஒரு தீர்வு எடுக்கப்பட்டது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -