பாறுக் ஷிஹான்-
மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையில் புதிய 'தொழில் நுட்ப ஆய்வுகூடம்' திறந்து வைக்கப்பட்டது.
நேற்றைய தினம் (7) இத்தொழிநுட்ப ஆய்வு கூடத்தை கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்னன் ,பாராளுமன்ற உறுப்பினர் கே.கே மஸ்தான்,வடக்கு மாகாண சபை மீன்பிடி,போக்குவரத்து அமைச்சர் பி.டெனிஸ்வரன்,மாகாண சபை உறுப்பினர் எச்.எம் றயீஸ்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறுக் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
குறித்த நிகழ்விற்கு வர்த்தக வாணிப அமைச்சர் றிசாட் பதியூதீன் சமூகமளிக்க வில்லை. எனினும் இப்பாடசாலையின் நீண்ட கால தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அதிதிகளாக கலந்து கொண்ட அனைவரும் தங்கள் கருத்துக்களில் சுட்டிக்காட்டி நின்றனர்.