இனி ஆண்களும் வெள்ளைதான் - இதோ சூப்பர் டிப்ஸ்

பொதுவாக பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் வெளியில் சென்று வருவார்கள். என்ன தான் அவர்கள் தங்கள் அழகின் மீது வெளிப்படையாக அக்கறை காட்டாவிட்டாலும், தனிமையில் இருக்கும் போது தங்களை அழகுபடுத்தி கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.

குறிப்பாக ஆண்கள் வெள்ளையாக விருப்பப்படுவார்கள். இதன் காரணமாக வெளியில் கிடைக்கும் செயற்கை முறையில் ஆன கிரீம்களை பயன்படுத்துவார்கள். அது அப்போதைக்கு தீர்வு தருமே தவிர, நிரந்தர தீர்வாக மாறாது.

பொதுவாக ஆண்கள் வெயிலில் அதிக சுற்றுவதால் அவர்களின் சருமம் கருமையாகிவிடும். அதைப்போக்குவதற்கும் பல கிரீம்களை பயன்படுத்துவர். இனிமேல் அதுபோன்ற செயற்கை கிரீம்களை பயன்படுத்த வேண்டாம். இயற்கை முறையில் கருமையாக உள்ள சருமத்தை, வெள்ளையாக்குவது எப்படி என்று பார்ப்போம்.

எலுமிச்சை சாறு:-

எலுமிச்சை சாற்றினை நீரில் சரிசம அளவில் கலந்து, சருமத்தின் மீது தடவி 10 நிமிடம் கழித்து கழுவலாம். இல்லாவிட்டால், எலுமிச்சை சாற்றுடன் சிறிது தேன் கலந்து, சருமத்தில் தடவி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

கற்றாழை:-

பெரும்பாலான வீட்டில் கற்றாழை இருக்கும். அத்தகைய கற்றாழை ஜெல்லை தினமும் முகத்திற்கு காலையிலும், மாலையிலும் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், சரும கருமை நீங்கி, சருமம் வெள்ளையாகும்.

கடலை மாவு:-

கடலை மாவுடன் பால் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சருமத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவ, சருமத்தில் உள்ள கருமை நீங்கும். இந்த முறையை ஆண்கள் தினமும் பின்பற்றி வந்தால், கருமை நீங்குவதோடு, முகம் பொலிவு பெறும்.

சந்தனம்:-

சந்தனப் பொடி குளிர்ச்சிமிக்கது மற்றும் இது சரும கருமையைப் போக்கவல்லதும் கூட. அத்தகைய சந்தனப் பொடியுடன் சிறிது மஞ்சள் தூள் மற்றும் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் உலர வைத்து கழுவ வேண்டும்.

வெள்ளரிக்காய்:-

வெள்ளரிக்காயைக் கொண்டு தினமும் முகத்தை சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மை, சருமத்தில் இருக்கும் கருமையை நீக்கும்.

முல்தானி மெட்டி:-

1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு உலர்ந்த பின் கழுவ வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -