அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை.மொறவெவ பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற கலாச்சார மண்டப கட்டிடத்தின் நிர்மாணப்பணிகளை மேற்கொள்வதற்காக வந்த பணியாளர்களுக்கு நேற்றிரவு (11) இனந்தெரியாத குழுவினரால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு தாக்குதலில் காயமடைந்தவர்கள் மூதூர்.பாலநகர் பகுதியைச்சேர்ந்த எம்.யூ.லரீப் (37 வயது) கே.எம்.நிப்ராஸ் (19 வயது) மற்றும் மூதூர்..பீ.எம்.பீ.ரைஸ் மில் .ஆர்.எம்.மாஹீர் (26வயது) எனவும் தெரியவருகின்றது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது- மொறவெவ பிரதேச சபையின் கலாச்சார மண்டபத்தின் நிர்மாணப்பணிகளாக வந்தவர்கள் அக்கட்டிடம் நிர்மானிக்கும் இடத்தில் தங்கியிருந்த வேளை மோட்டார் சைக்கிள்களில் வருகை தந்த இனந்தெரியாத குழுவினர் டிஸ்கவரி சைக்கிள் வைத்திருப்பவர் யாராவது இருக்கின்றார்களா என கேட்டுவிட்டு சென்று பின்னர் வருகை தந்த மோட்டார் சைக்கிளை பிரதான வீதியில் நிறுத்திவிட்டு தாக்குதல் நடாத்தியதாக தாக்குதலுக்குள்ளானவர்கள் தெரிவித்தனர்.
தாக்குதலுக்குள்ளான மூவரும் மஹாதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை மொறவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.