ஓமானில் சலாலாஹ் பிரதேசத்தில் இயற்கை நீர்த்தடாகமொன்றின் அருகில் இருந்து 'செல்பி' எடுக்க முற்பட்டுள்ள இரண்டு இலங்கை பெண்கள் அதில் விழுந்து உயிரிழந்துள்ளனர்.
நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இந்த இரு பெண்களும் குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள நிலையில், குறித்த நீர்த்தடாகத்திற்கு அருகில் இருந்து 'செல்பி' எடுக்க முயற்சித்துள்ளனர்.
இதன் போது, ஒரு பெண் நீர்த்தடாகத்தில் விழுந்துள்ள நிலையில், அவர் மற்றைய பெண்ணின் கையை பிடித்துள்ளதால் அவரும் தடாகத்தில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தடாகத்தின் ஆழமான பகுதியிலேயே அந்த பெண்கள் வீழந்துள்ளனர்.
எவ்வாறாயினும் குறித்த பெண்களை காப்பாற்ற அங்கிருந்தவர்கள் பெரும் முயற்சி எடுத்துள்ளனர். பின்னர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். எனினும், குறித்த பெண்கள் மருத்துமனையில் அனுமதிக்கும் முன்னரே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.