ஹைதர் அலி -
தான் மேற்கொள்ளும் வாழ்வாதார தொழிலான மீன்பிடி தொழிலினை மேம்படுத்துவதற்கு வாழ்வாதார உதவி ஒன்றினை செய்து தருமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களிடம் வறுமைகோட்டின்கீழ் வாழும் இரு மீனவ குடும்பங்கள் வேண்டுகோள் ஒன்றினை விடுத்திருந்தனர்.அதற்கமைவாக தனது சொந்த நிதியிலிருந்து ஒருதொகை மீன்பிடி உபகரணங்களை அவ்விரு மீனவர்களுக்கும் 2016.10.15 (சனிக்கிழழை) தனது காரியாலயத்தில் வைத்து வழங்கி வைத்தார்.
மற்றவர்களின் தயவில் தங்கி வாழாமல் தங்களது முயற்சியினால் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்று பாரிய சவால்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் இவ்வாறான குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் செய்யும் விடயத்தில் வெறுமனே பொருட்களை கொடுப்பது மாத்திரமல்லாமல் அவர்களது வாழ்வினை மேம்படுத்தக்கூடிய பிரயோசனமுள்ள விதத்தில் உதவிகளை வழங்க வேண்டும் என்று இந்நிகழ்வின்போது மாகாண சபை உறுப்பினர் தெரிவித்தார்.