கிழக்கு மாகாண முதலமைச்சரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி..!

லங்கையில் முஸ்லிங்களுடன் இணைந்து வாழும் சக சிறுபான்மையினத்தவரான இந்து மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்

நன்மையினால் தீமை தோற்கடிக்கப்பட்டதையும் அறியாமையை நீக்கி அறிவுடைமையை ஏற்படுத்தியமை​யையும் மற்றும் இருள் அகற்றி ஔி ஏற்றியதையும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவதில் பொதிந்துள்ள அர்த்தங்களாக இந்துக்கள் நம்புகின்றனர்.

முன்னர் தமிழர்கள் மற்றும் முஸ்லிங்களிடையே இருந்த நல்லுறவும் சகோதரத்துவமும் தற்போது அருகியுள்ளதை காண முடிகின்றது.

எனவே இந்த நாளில் இரு சாரார் மனதிலும் உள்ள கசப்புக்களை அகற்றி சிறுபான்மையினத்தவராய் விட்டுக் ​கொடுப்புக்களுடன் தமது உரிமைகளுக்காய் கரம்கோர்த்து வீறு நடைபோடவேண்டும்.

அத்துடன் இன்று தீபாவளிப் பண்டிகையை கொண்டாடும் மலையக சகோதர்ர்கள் தமது அன்றாட ஜீவியத்துக்காய் போராடி வருகின்றனர்.

அத்துடன் வடக்கு கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது

எனவே இந்த நன் நாளில் சிறுபான்மையினத்தவர்களான நாம் நமக்குள் ஒற்றுமையைப் பேணுவதற்கு உறுதி பூண்டு நம் தாய் நாட்டில் நமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஒன்றிணைய வேண்டும் எனகேட்டுக்கொள்கின்றேன்.

கிழக்கு மாகாண முதலமைச்சர்​,
ஹாபிஸ் நசீர் அஹமட்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -