ஹைதர் அலி-
காங்கயனோடை கிராமத்தில் இதுவரை காலமும் மின்சார இணைப்பு கிடைக்கப்பெறாத பகுதியொன்றுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மின் அத்தியேட்சகர் நெளபல் அவர்களுடன் 2016.10.15ஆந்திகதி (சனிக்கிழமை) விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
இப்பகுதிக்கான மின்சார இணைப்பு வசதிகள் எதுவும் இதுநாள் வரை செய்யப்படாமை காரணமாக இப்பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். தமது பகுத்திக்கான மின் இணைப்புகளை பெற்றுக்கொடுக்குமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களிடம் பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளினை அடுத்து இக்கள விஜயத்தினை மேற்கொண்டு அப்பகுதி மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை நேரில் கேட்டறிந்து கொண்டார்.
இதன்போது குறித்த பகுதிக்கான மின்சார இணைப்பு வசதிகளை விரைவில் ஏற்படுத்தி கொடுப்பதற்கு மின்சார வாரியத்தினருக்கு உத்தரவு வழங்கியதோடு, வீதி மற்றும் பொதுமக்களின் காணிகளினூடாக மின்கம்பங்களை இடுவது தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கினார்.