வெள்ளிவிழா கண்ட பஷீருக்கு மஹ்முத் மகளிர் கல்லூரியில் கௌரவம்..!

எம்.வை.அமீர் -
டந்த 26 வருடங்களாக கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரியில் மிகச்சிறந்த கல்விச்சேவையாற்றிய முன்னாள் அதிபர் ஏ.எச்.ஏ.பஷீரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு எதிர்வரும் 2016-10-30 ஆம் திகதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு நிகழ்வு தொடர்பாக பத்திரிகையாளர்களை தெளிவூட்டும் பத்திரிகையாளர் சந்திப்பு 2016-10-09 ஆம் திகதி கல்லுரியின் அதிபர் திருமதி எஸ்.ஏ.லியாக்கத் அலி தலைமையில் கல்லுரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின்போது விழாக்குழுவின் பிரதித் தலைவரும் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபரும் சட்டத்தரணியுமான எம்.சி.ஆதம்பாவா கலந்துகொண்டு விழாவை வெற்றிகரமாக நடத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளித்தார்.

அத்துடன் 2016-10-30 ஆம் திகதி பாடசாலை வளாகம் முழுவிழாக்கோலம் பூண்டிருக்குமென்றும், நிகழ்வுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீர் வழங்கல் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான றவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொள்வதுடன் கிழக்கு மாகான முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் மாகாணக் கல்விப்பணிப்பாளர் உள்ளிட்டவர்களும் ஏனைய துறைசார்ந்த உயர் அதிகாரிகளும் மதப்பெரியார்கள், பழைய மாணவிகள் மக்கள் என 1500 க்கு மேற்பட்டவர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது. அத்துடன் நிகழ்வில் முன்னாள் அதிபர் ஏ.எச்.ஏ.பஷீரின் சேவைநலன் தொடர்பான மலர் ஒன்றும் வெளியிடப்படவுள்ளதாகவும் கூறப்பட்டது.

பத்திரிகையாளர் சந்திப்பின்போது பாடசாலை அபிவிருத்திக்குழுவின் செயலாளர் எம்.ஐ.பாஸி, விழாக்குழுவின் பொருளாளர் ஏ.பாறுக், பாடசாலை அபிவிருத்திக்குழுவின் உறுப்பினர்களான றிப்கா அன்சார், ஏ.எச்.நதீரா, ஐ.எல்.ஏ.அஸீஸ், விழாக்குழுவின் ஊடகப்பொறுப்பாளர் நளீம் லத்தீப் ஆகியோரும் பிரசன்னமாகி விழா தொடர்பான கருத்துக்களை தெரிவித்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -