தமிழ் – முஸ்லிம் பிரதேசத்தில் புத்தர் சிலையின் தோற்றம்

ல்லாட்சி அரசாங்கத்தின் கீழ், முன்னைய அரசாங்கத்தில் நடந்த இனவிரோதச் செயல்களோ, மதத்தை அடிப்படையாகக் கொண்ட கெடுபிடிகளோ நடக்கக் கூடாதென்றே மக்கள் விரும்பி இருந்தனர். எனினும், சிறுபான்மையினரின் மத உரிமைகளை மீறும் விதத்தில், சிங்கள – பௌத்த குடியாட்டங்கள் ஏதும் இல்லாத, முஸ்லிம்களும் தமிழர்களும் செறிந்து வாழும் பிரதேசங்களில் பலவந்தமாக புத்த சிலைகளை அமைப்பது இனங்களுக்கிடையிலான நல்லுறவுகளுக்கு இடையூறாக இருப்பது மாத்திரமன்றி மதக்கலவரங்களுக்கும் வழிவகுக்கும் சந்தர்பங்களை ஏற்படுத்துவதாகவும் அமையும். 

இத்தகைய ஒரு நிகழ்ச்சி தமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, “இறக்காமத்துக்கு” அண்மையிலுள்ள, மாணிக்கமடு பிரதேசத்தில் அமைந்துள்ள, “மாயக்கள்ளி மலையில்” புத்தர் சிலை ஒன்று திடீரென வைக்கப்பட்டதோடு ஏற்பட்டுள்ளது. இது அப்பிரதேசத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்து சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதில் அரசாங்கம் தலையிட்டு உரிய தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.

எஸ்.சுபைர்தீன்,
செயலாளர் நாயகம்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -