எஸ்.எம.சன்சீர்-
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலிம்நகர் பிரதான வீதியில் நேற்று சனிக்கிழமை 3 மாலை இடம்பெற்ற வாகன விபத்தில், பஸ் சில்லுக்குள் சிக்குண்டு இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் பலியாகியுள்ளார்.
பொத்துவிலைச் சேர்ந்த எம்.ஜ.கால்டீன் என்ற விவசாயியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கண்டியில் இருந்து பொத்துவில் அறுகம்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ்சை நிறுத்தி ஏற முயன்றபோதே தவறி வீழ்ந்து பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.