கல்முனை, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளப்பெருக்கு மற்றும் சூழல் பாதிப்புக்களை கட்டுப்படுத்தல் (விடய இல. 18)
கல்முனை, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவில் காணப்படும் கலப்பிலிருந்து நீர் நிரம்பி வடிவதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
இதனை கருத்திற் கொண்டு குறித்த கலப்பின் இயற்கை தன்மையினை பாதுகாக்கும் வகையில் கலப்பினை அபிவிருத்தி செய்தல் மற்றும் கலப்பினை சூழ வசிக்கும் 2700 குடும்பங்களிலுள்ள 10,000க்கும் அதிகமான பொது மக்களினை வெள்ளப்பெருக்கு மற்றும் கலப்பு அரிப்பினால் பாதுகாக்கும் நோக்கில் 162 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் கலப்பினை சூழ அணைக்கட்டு ஒன்றினை அமைப்பது தொடர்பில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.