உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தோல்வியடையும் எனப் பயந்த அரசாங்கம், அதனை ஒத்திவைத்து, கூட்டுறவுத் துறை நிறுவனங்களின் தேர்தலை நடாத்தியது எனவும், அதில் தோல்வியடைந்ததைக் கண்டு தற்பொழுது அவற்றையும் ஒத்திவைக்கும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பு, நெலும் மாவத்தையிலுள்ள காரியாலயத்தில் நடைபெற்ற உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் அரசாங்கம் எவ்வழியோ, கூட்டுறவு நிறுவனங்களும் அவ்வழியே என்றுதான் காணப்பட்டது. ஆனால், தற்பொழுது அது தலைகீழாக மாறியுள்ளது.