சிலாவத்துறையில் மீன் பிடித்துறைமுகம் அமைக்கப்படுமா?

முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்-

புராதனகாலத்தில் முத்துக் குளித்தலில் கொடிகட்டிப்பறந்த பிரதேசமே சிலாவத்துறைப் பிரதேசமாகும் ,அங்கு வரி அறவிடுவதற்கும், மேற்பார்வைக்குமாக அமைக்கப்பட்ட கட்டிடமே (அல்லி ராணி கோட்டை) டொரிக் ஆகும்.;அதற்கு அண்மையில் வெளிச்சவீட்டுக்கோபுரம் ஒளிரும் விளக்கில்லாமல் கம்பீரமாக வெண்மையாகக் காட்சி தருகின்றது.

இங்கு கண்டமேடைகள் ,பார்கள்,என்பன அமைந்துள்ளமையால் அதிகம் மீன்கள் பிடிக்கப்படுகின்றன. இங்கு உள்ளுர் மீனவர்களும்,பருவகால வருகை தரு மீனவர்களும் மீன் பிடிப்பது வழக்கம் இவர்கள் சிறிய ரகப்படகுகளையே பயன் படுத்தப்படுகின்றனர். வெளிச்சவீடு சரியாக இயங்காமையால் மீனவர் திசை மாறிச் செல்லல்,வழிதவறுதல் போன்ற சவால்களை எதிர் கொள்கின்றனர்.

அல்லிராணிக்கோட்டைக்கு அண்மையில் இருக்கும் வெளிச்சக்கோபுரத்திற்கு மின்விளக்கைப் பொருத்தி அதற்கு அண்மித்த பகுதியில் ஒரு மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்பட்டால் மீனவக் கைத் தொழில் விரிவடைவதுடன் . புத்தளத்திற்கான சிறந்த ஒரு நீர் வழிப்போக்குவரத்தையும் தொடங்கி வைக்கலாம்.;

கடந்தகால வரவுசெலவுத் திட்டப் பிரேரனைகளிலும் சிலாவத்துறையில் ஒரு மீன் பிடித்துறைமுகம் அமைக்கப்படவுள்ளதாக தெட்டத்தெளிவாகக்குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அது தொடர்பாக எவ்விதப்பணிகளும் இதுவரை நடைபெறவில்லை. ஆகவே முசலிப்பிரதேச மக்களின் நன்மைகருதி அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் மீன் பிடித்துறை அமைச்சருடன் தொடர்பு கொண்டு துரிதமாக மீன்பிடித்துறைமுகம் அமைக்க ஆவன செய்யுமாறு பிரதேசமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -