பழுலுல்லாஹ் பர்ஹான்-
சீடோ அமைப்பினால் புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலின் கீழ் பரிபாலனத்திலுள்ள மையவாடிக்கு ஒளி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனை கையளிக்கும் நிகழ்வு கடந்த அண்மையில் சீடோ அமைப்பின் தலைவர் எம்.பீஎம். ஜௌபர் ஜேபி தலைமையில் இடம்பெற்றது.
இதில் புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலின் தலைவர் கே.எல்.எம்.பரீட் ஜேபி ,செயலாளர் எம்.ஐ.எம். இர்பான் ஜேபி ஆகியோரும், பல உலமாக்களும், காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல். நஸீர்தீன் உட்பட பொது மக்களும் சீடோ அமைப்பின் நிருவாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.