அட்டாளைச்சேனையைச்சேர்ந்த வயோதிபர் ஒருவர் மேல் மாடியிலிருந்து கீழே வீழ்ந்து மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது.
ஆதம் லெப்பை சாஹுல் ஹமீத் (70வயது) என்பவரே மேற்படி சம்பவத்தில் உயிர் இழந்தவராவார் .
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது.
மருதமுனையை பிறப்பிடமாகவும். நான்கு பிள்ளைகளின் தந்தையுமான இவர் நிந்தவூரில் வழமை போன்று தனது தச்சுத்தொழிலில் ஈடுபடிருந்த சமயம் பிற்பகல் 4மணியளவில் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்த நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக சம்மாந்துறை பொலீஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.