முசலியூர் கே.சி.எம். அஸ்ஹர்-
மன்னார் முசலிப்பிரதேச செயலாலர் பிரிவுக்கு உட்பட்ட கிராமங்களில் இருந்து இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு உதவிபுரிய 'முசலி அபிவிருத்தி நிறுவனம்' (எம்.டி.எப்) முன்வந்துள்ளது. வழமையைவிட முசலியில் இருந்து கூடுதலான மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது இதற்காக உழைத்த ஆசிரியர்கள். அதிபர்கள் என்போர் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள்.
பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கு ஆரம்பகட்டச் செலவு அதிகம் ஏற்படுவது வழக்கம். பொருளாதார ரீதியில் முன்னேறத்துடிக்கும் குடும்பங்களுக்கு இது ஒரு பெரும் சவாலே ஆகும். இதனைச்சரியாக இனம் கண்டு உதவி புரிய மேற்படி நிறுவனம் முன்வந்துள்ளது. புலமைப்பரிசில் எவ்வழியில் கிடைத்தாலும் அது ஒருவரப்பிரசாதமே ஆகும். இதைச்சரியாகப் பயன்படுத்தி இலக்குகளை அடைந்துகொள்ள வேண்டும்.
'கற்பவனாக இரு, அல்லது கற்பிப்பவனாக இரு, அல்லது கற்பவனுக்கு உதவுபவனாக இரு, ஆனால், நான்காம் நபராக இருந்துவிடாதே. (ஹதீஸ்)
நாம் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்விபயின்ற வேளை பலவந்த வெளியேற்றத்தால் பலமாக பாதிக்கப்பட்ட நிலைமை 1990- சில நல்லிதயம் படைத்த தனிநபர்களும்; அமைப்புக்களும் எமது கல்விநடவடிக்கைக்கு பெரிதும் உதவினர். மர்ஹும் காதர் ஹாஜியார் அவர்கள், இந்தியப்பேராசிரியர் மன்சூர்ஆலம் அவர்கள், பாமிஸ் நிறுவனம், வை.எம்.எம்.எ,ஐ.டி.பி. நிறுவனத்தினர் போன்றோரும் மறக்கமுடியாதவர்கள். இதற்காக முன்னின்று உழைத்த பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் அவர்கள், சகோதரர் எஸ்.எம்.நியாஸ், சகோதரர் ஸாதிக் போன்றோரும் நன்றிக்குரிய வழிகாட்டிகள்.
பல்கலைக்கழகத்திற்கு இம்முறை தெரிவுசெய்யப்பட்டுள்ள முசலித்தேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் தமது சுயவிபரங்களை பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு 16.10.2016 இற்கு முன்பதாக அனுப்பிவைக்குமாறு வேண்டிக்கொள்கின்றனர்.
பொதுச்செயலாளர்,
முசலி அபிவிருத்தி நிறுவனம்.
cell No:0719065701,077778455.