பெளத்த மதம் தொடர்பில் உள்ள சரத்தை மாற்றுவதற்கு எந்தவொரு கட்சியும் கோரவில்லை - பிரதமர்

புதிய அரசியல் யாப்பைத் தயாரிக்கும் தற்போதைய பணியில் பொளத்த மதம் தொடர்பில் உள்ள சரத்தை மாற்றுவதற்கு எந்தவொரு கட்சியும் கோரவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் யாப்பொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அரசாங்கத்திற்கு தேவை என்று தெரிவித்த பிரதமர் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பொதுமக்களுக்கு இதற்கான அதிகாரம் கிடைத்துள்ளது. இந்த அதிகாரத்தை உறுதி செய்வதற்காக புதிய அரசியல் யாப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் கூறினார்.

நுகேகொட - ஹங்கொடவில - பெக்கிரிவத்த ஸ்ரீ விவேகாராம விகாரையில் நேற்று மாலை நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு பிரதமர் உரையாற்றினார்.

விகாரையின் புனித சின்னங்களுக்கான கட்டடத்தைத் பிரதமர் திரை நீக்கம் செய்தார். அதனைத்தொடர்ந்து புதிய தர்மபோதனை மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் பிரதமர் தலைமையில் இடம்பெற்றது. அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கான உரிய இடத்தை அகற்றுவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும் பிரதமர் கூறினார்.

அரசியல் யாப்பை வகுக்கும்பொழுது பொதுமக்களின் கருத்து மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வது அரசாங்கத்தின் நோக்கமாகும். இதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தேர்தல் முறையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வாக விகிதாசார கலப்பு முறை, மற்றும் தொகுதி முறையைக் கொண்ட புதிய தேர்தல் முறையொன்று நாட்டிற்கு அறிமுகப்படுத்துவதற்கு அரசியல் யாப்பின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார். 

வெல்லன்வில ரஜமகா விகாராதிபதி சங்கைக்குரிய கலாநிதி பெல்லன்வில விமலரத்ன தேரர், மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -