கையில் பணம் இருந்தும் வேலைகளை ஆரம்பிக்காமல் இருப்பது வேதனையாக இருக்கின்றது - இம்ரான் மஹ்ரூப்

எப்.முபாரக்- 
திருகோணமலை கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பேராற்றுவெளி பகுதி மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் நேரடியாக இன்று ஞாயிற்றுக்கிழமை (9) விஜயம் செய்து பிரச்சினைகளை கேட்டறிந்தார். இதன் போது அப்பகுதி மக்கள் ஏகோபித்த கருத்தாக முன்வைத்ததுதான் இப்பிரதேசத்தில் முப்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக காணப்படுகின்ற பழமையான பாழமாக திகழ்கின்ற பேராற்றுவெளி பாலமாகும். 

இப்பிரதேசத்தில் 550 குடும்பங்கள் வாழ்கின்ற போதிலும் பண்டாரநாயக்க மாவத்தையும்,பேராற்றுவெளி கிராமத்தையும் இணைக்கின்ற பிரதான பாலமாகவும் இப்பாலம் அமைந்து காணப்படுகின்றது. நீண்ட காலமாக இப்பாலத்தின் கம்பிகள் துர்பிடித்த நிலையிலும் குழிகளும், ஓட்டைகளும் விழுந்த நிலையில் காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் பிரச்சினைகளையும் ,குறைபாடுகளையும் தெளிவுபடுத்தினார்கள். இப்பகுதி மக்களினால் கந்தளாய் பிரதேச சபை முன்னால் உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள்,கந்தளாய் விஜயம் செய்கின்ற அரசியல் வாதிகள் பலரிடம் பாலத்தினைக்காட்டி முன்வைக்கின்ற போதிலும் எவராலும் அதற்கான தீர்வுகளும்,நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை எனவும் பிரதேச மக்கள் தெரித்தனர். 

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இப்பாலத்தின் ஒதுக்கீடுகள் மற்றும் நிர்மானிப்பதில் உள்ள பிரச்சினைகள் பற்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது: 

திருகோணமலை கந்தளாய் பேராற்றுவெளி பாலம் சம்பந்தமாக இப்பிரதேச மக்களின் பாரிய எதிர்ப்பாக காணப்படுகின்றது, சுமார் முப்பந்தைந்து வருடங்களுக்கு மேலாக இப்பாலம் பாரிய குறைபாடாக காணப்படுகின்றது, நான் மாகாண சபை உறுப்பினராக இருந்தபோது இப்பிரதேசத்தின் நிலைமைகளை நேரில் அவதானித்தேன் இப்பகுதி மக்கள் தனது உயிரை பணயம் வைத்தவர்களாக பாலத்தினூடாக பயணம் செய்வார்கள் இதனை கூடிய விரைவில் புனரமைப்பதற்காக வேண்டி இருபது இலட்சம் ரூபாய் நிதியினை கந்தளாய் பிரதேச செயலகம் ஊடாக ஒதுக்கியிருந்தேன், ஆயினும் அதற்கான வேலைகள் எதுவும் நடைபெறவில்லை. 

கையில் பணம் இருந்தும் வேலைகளை ஆரம்பிக்காமல் இருப்பது வேதனையாக இருக்கின்றது, அண்மையில் பிரதேச செயலாளரிடம் இருந்து கடிதமொன்று கிடைத்தது அதிலே இப்பாலத்தினை புனரமைக்க இருபது இலட்சம் போதாது என்பது இலட்சம் தேவைப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. எவ்வளவு இலட்சம் தேவைப்பட்டாலும் நான் உரிய அமைச்சுகளை தொடர்பு கொண்டு மிகுதிப்பணத்தினை பெற்றுத்தர முடியும், ஏழு மாதங்கள் கடந்த நிலையிலும் இன்னும் இப்பாலத்திற்கான புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை. 

இங்கே ஜாதி ,மதம், இனம் பார்க்கப்படக்கூடாது இங்கே இனத்துவேசங்களை காட்டாது வேலைகளை ஆரம்பியுங்கள் அத்தோடு ஒரு சில அரசியல் வாதிகள் இவ்விடயத்தில் குளிர்காயநினைக்கும் விடங்களிலும் தவிர்ந்து கொள்ள வேண்டும். மக்களுக்கான அபிவிருத்திகளை யார் செய்தாலும் பரவாயில் இடமளிக்க வேண்டும் என்றார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -