காத்தான்குடி மத்தரசதுல் பலாஹ் சந்தியில் வடிகான் புனரமைப்பு பணிகளில் சிப்லி பாரூக்


காத்தான்குடி ஊர் - வீதி மத்தரசதுல் பலாஹ் சந்தியில் வடிகான் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதனால் கழிவு நீர் மற்றும் மழை நீர் வீதியில் தேங்கி நிற்பதன் காரணமாக அவ்வீதியினை பயன்படுத்தும் மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இவ்விடத்திற்கு 2016.10.29ஆந்திகதி நேரில் விஜயம் செய்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் உரிய அதிகாரிகளை தொலைபேசியினூடாக தொடர்புகொண்டு வீதியில் தேங்கி நிற்கும் நீரினை தற்காலிகமாக வடிந்தோடச் செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுகொண்டதற்கினங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வீதியில் தேங்கி நின்ற நீர் வடிந்தோடச் செய்யப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக தெளிவுபடுத்திய கிழக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் “தற்போது ஊர் வீதிக்கான புனரமைப்பு பணிகள் மற்றும் வடிகான் வேலைகள் ஆகியன மேற்கொள்ளப்பட்டுவருவதன் காரணாமாகவே இத்தகையதொரு நிலை ஏற்பட்டுள்ளதாகவும், புனரமைப்பு வேலைகளை துரித்தப்படுத்துவதற்கு உரிய தரப்பினருக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகவும்” கூறினார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -