பொருளாதார கொள்கைகள் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றில் விசேட உரையாற்ற உள்ளார்.
வரவு செலவுதிட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அடுத்த ஆண்டு மேற்கொள்ளப்பட உள்ள பொருளாதார திட்டங்கள் குறித்தும் பொருளாதார கொள்கைகள் குறித்தும் இந்த உரையில் விளக்கம் அளிக்க உள்ளார்.
வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு அளிக்கப்பட உள்ள நிவாரணங்கள் குறித்தும் பிரதமர் தகவல் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 10ம் திகதி நிதி அமைச்சர் ரவி கருணாநயாக்க வரவு செலவுத்திட்டத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்க உள்ளார்.