முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்-
அண்மையில் முகநூல்களில் முசலிப்பிரதேசத்தில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் முசலிப்பிரதேச புத்திசீவிகள் அனைவரையும் செய்த்தான்கள் என அவமதித்துப்பேசியுள்ளதாக வைரசாக தகவல் பரவி வருகின்றது.இதற்கு எதிராக அன்றி வைரஸ் போடவேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது.
வடமாகாணத்தில் இருக்கின்ற பிரதேசங்களில் முஸ்லிம்களை அதிகம் கொண்ட பிரதேசம்,முஸ்லிம்களால் ஆளப்படும் பிரதேசம்,முஸ்லிம் பாடசாலைகள் அதிகமுள்ள பிரதேசம்,விரைவாக கல்வியில் முன்னேறிவரும் பிரதேசம்,அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செல்வாக்கு அதிகமுள்ள பிரதேசம்,வன்னி பாராளுமன்ற உறுப்பினரைத் தீர்மானிக்கும் பிரதேசம்,பலகுக்கிராமங்களைக் கொண்ட பிரதேசம் என்ற சிறப்புக்களைக் கொண்ட பிரதேசமே முசலியாகும் இதனை அமைச்சர் அறியாமல் இருக்கமாட்டார்.
முசலிப்பிரதேசத்தில் உள்ள புத்திஜீவிகளில் பெரும்பான்மையானோர் அமைச்சர் றிசாத் பதியுதீனின் அபிவிருத்திப் பயணத்தில் அவரோடுதான் உள்ளனர்.முசலியில் ஏற்பட்டுள்ள,ஏற்பட்டுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் யாவும் அல்லாஹ்வின் கிருபையால் அவரின் ஊடாகவே இடம்பெறுகிறது.இதுதான் உண்மை அவருடன் போட்டீயிடும் அளவில் தகுதியுடைய ஒருவரிருந்தால் அவரை வெளியில் கொண்டுவாருங்கள்.
தன்னை அதிகம் நேசிக்கும்,தன்னால் அதிகம் நேசிக்கப்படும் முசலிப்பிரதேசப் புத்திஜீவிகளை ஒட்டுமொத்தமாக அப்படித்தூசித்து தன் செல்வாக்கைக் குறைக்கும் அரசியல் கன்றுக்குட்டி அல்ல அவர். மிகுந்த அரசியல் ஞானமுள்ள சிரேஷ்ட்ட அரசியல்வாதியே அவர்.அமைச்சரின் அபிவிருத்தியைக் கறுப்புக்கண்ணாடி அணிந்து சில அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு இணங்கச் செயற்படும் புத்திஜீவிகளின் கருத்துக்களைச் சாடி இருக்கலாம். இது யாருக்கு உரியதோ அதை அவர்கள் தலையில் போட்டுக்கொள்ளட்டும்.மாறாக முசலிப் புத்திஜீவிகள் அனைவரின் தலையிலும் தயவுசெய்து போட முயல வேண்டாம்.
ஒரு தேசியத்தலைவரை நாம் கொண்டுள்ளோம் அதன் பெறுமதி சிலருக்குப்புரியாது. அதனை இழந்தால் அதன் வலி முழு அமைச்சரையும்,பாராளுமன்ற உறுப்பினர்களையும் இழந்து தவிக்கும் சில பிரதேச மக்களிடம் கேட்டால் புரியும்.தாள்காசுகளை தாராளமாக செலவழித்தவன் சில்லறைக் காசை புரட்டி புரட்டிப் பார்க்கும் நிலைமை எமது பரம்பரைக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது.