தொலைபேசி முற்கொடுப்பனவு அட்டையைப் பயன்படுத்துபவர்கள் மூன்றில் ஒரு பகுதியை வரியாக செலுத்த வேண்டும் என அரச நிதி கொள்கை வகுப்புத் திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், அடுத்த நவம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ள புதிய வற் வரி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான வரி என்பவற்றினால் மூன்றில் ஒரு பகுதியை வரியாக செலுத்த வேண்டும். மேலும், தொலைபேசியால் மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கு அறவிடப்படவுள்ள இரு வரிகளுக்கு மேலாக இன்னும் இருவகையான வரிகள் அறவிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், அடுத்த மாதம் முதலாம் திகதியின் பின்னர் 150 ரூபா தொலைபேசிக் கட்டணமாக செலுத்தும் ஒருவர் 100 ரூபாவின் சேவையையே பெற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், இவ்வாறு மேலதிகமாக பெற்றுக்கொள்ளப்படும் 50 ரூபாவை வரியாக செலுத்த வேண்டும் எனவும் குறித்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.