உலக நகர தினம் பத்தரமுல்லையில் - பிரதம அதிதியாக பிரதமா்

அஷ்ரப் ஏ சமத்-
ன்று (31) உலக நகர தினம் நகர மற்றும் மெகா பொலிஸ் அமைச்சா் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் பத்தரமுல்லையில் உள்ள ”சுகுருபாய” கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. பிரதம அதிதியாக பிரதமா் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டாா்.

இந் நிகழ்வில் உரையாற்றிய பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க -

இன்று உலக நாடுகளின் அபிவிருத்திகளை அடையாளப்படுத்துவது அந்த நாட்டில் உள்ள நகரங்கள் அடைந்துள்ள அபிவிருத்தியியைக் அவாதாணித்தே இனம் காண்கின்றோம். உலகில்: இந்து சமுத்திரத்தில் உள்ள நாடுகளில் பொருளாதாரத்தின் ஒரு கேந்திர நிலையமாக இலங்கையின் மேல் மாகாணம் உள்ளது. இந்த துரிதமாக மாநகரங்களை அபிவிருத்திக செய்வதற்காகவே இந்த ஆட்சி மலா்ந்த பின் ஜனாதிபதியும் நானும் இணைந்து நகரங்களை அபிவிருத்தி செய்வதற்கு தணியானதொரு அமைச்சினை ஏற்படுத்த வேண்டும். எனத் தீர்மாணித்தோம். அதனை பொறியியலாளராக உள்ள பாட்டலி சம்பிக்க ரணவக்கவிடம் இந்த அமைச்சிற்கு பொறுப்பாக நியமிக்கவும் அன்று முடிபு எடுத்தோம். 

இதற்கு உதாரணமாக 1977 ல் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவா்த்தன அவா்கள் அன்று நீர்ப்பாசன அமைச்சினை விடுத்து அதில் தணியானதாக மகாவலி அபிவிருத்தி என்ற அமைச்சினை ஏற்படுத்தினாா் அதில் சிறந்த அதிகாரிகளை இனம் கண்டு மாகாவலி அபிவிருத்தி அதிகார சபை ஒன்றையும் நிறுவி அந்த பொறுப்பை அமைச்சா் காமினி திசாநாயக்காவிடம் ஒப்படைக்கப்பட்டது. 30 வருடங்கள் முடிக்க வேண்டிய அதி துரித அபிவிருத்திகளை அவா் 10 வருடங்களுக்குள் அந்த அபிவிருத்தியை புரணப்படுத்தினாா். அதற்கு ஒப்பாகவே இந்த மெகா பொலிஸ் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் ஊடகாக இந்த நாட்டில் உள்ள சகல நகரங்களையும் துரித அபிவிருத்தியை ஏற்படுத்தி இந்த 5 வருடங்களுக்குள் நாம் அத்திரவாரமிட்டால் அடுத்த வரும் காலங்களில் மிக எளிதாக அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்கலாம்.

அமேரிக்காவில் அபிவிருத்தியில் நகரங்கள்தான் மிக துரித அபிவிருத்தி கண்பதற்கு புதிய நகரங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. நியோக் நகரம், சிக்காக்கோ நகரம், புஸ்டன் நகரம், லொஸ் ஏன்ஜல் நகரங்களாகும். அதே போன்று இங்கிலாந்தின் லண்டன் நகரமாகும். சீனாவில் சங்கை நகரம், பிங்கிங் நகரம் இவ்வாறான நகரங்கள் பொருளாத்தின் கேந்திர நகரங்களாகும். அதே போன்று இந்தியாவில் தென் பிராந்தியத்தில் திருவானந்தபுரம், ஹதராபாத், பங்களுர், சென்னை போன்ற நகரங்கள் அபிவிருத்தி அடைந்துள்ளன. ஆகவே தான் இந்திய சமுத்திரத்தில் சிங்கப் புர், துபாய் நகரங்களோடு போட்டி போடக் கூடியவகையிலும் பொருளாதாரத்தில் எமது நாடு மேலோங்கி நிற்பதற்காக மேல்மாகாணத்தில் 1200 சதுர கிலோ மீட்டா் கொண்ட பரப்பளவில் நாமது நகரங்களை துரித அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும். 

இந்த அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு யப்பான் உதவியளிக்க முன்வந்துள்ளது. அத்துடன் கண்டியில் பேரதெனியா தொட்டு குண்டகசாலை வரையிலான ஒரு நகர மற்றும் குருநாகல் தொட்டு குலியாப்பிட்டிய காலி போன்ற பிரதேசங்கள் அபிவிருத்தியடைய உள்ளன. ஹம்பாந்தோட்டை மாவட்டமே எமக்கு பிரச்சினையாக இருந்தது. இங்கு துறைமுகமும் விமாண நிலையமும் இதன் கடணையும் அடைக்க வேண்டிய பிரசச்சினை இருந்தது. இதற்காக அண்மையில் சீனா சென்று சீன பிரதமருடன் பேசியதன் பின்னா் இலங்கை - சீன சோ்ந்து சீனாவின் இரண்டு நிறுவனங்களுக்கு குத்தகை அடிப்படையில் இரண்டு நிறுவனங்களையும் வழங்கப்பட உள்ளது. இதனால் இலங்கை கடனில் இருந்து தப்பியது. அத்துடன் பில்லியன் டொலா்கள் இலங்கை வருமானமும் கிடைக்க உள்ளது. ஆகவே ஹம்பாந்தோட்டை தொட்டு மொரணகாலை வெல்லவாய வரையிலும் சகல துறைகளிலும் அபிவிருத்தி செய்யப்படும். அதே போன்று மண்னா் திருமலை அநுராதபுர நகரங்களும் அபிவிருத்தி செய்யப்படும் .

ஆகவே தேசிய அரசாங்கம் இந்த நல் ஆட்சியில் இருப்பதனால் இரு கட்சிகளும் இணைந்து பல அபிவிருத்தித் திட்டங்களை கலந்து பேசிச் தீர்மாணங்கள் எடுக்க முடியும். இந்த அரசின் 5 வருட காலத்திற்குள் நாம் அபிவிருத்திகளை அடித்தலம் விட்டால் அடுத்த 20 வருடங்களுக்குள் இலகுவாக எமது வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல முடியும். எமது இளம் பரம்பரையினருக்காக இந்த நாட்டினை ஒரு நல்ல சுபீட்சமானதொரு புமியாக கொண்டு செல்ல முடியும் எனவும் பிரதமா் அங்கு தெரிவித்தாா். 

அமைச்சா் சம்பிக்க ரணவக்க மற்றும் பிரதியமைச்சா் லசந்த அழகியவன்னவும் கலந்து கொண்டு நகரங்கள் சம்பந்தாக பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவா்களுக்க பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -