பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணம் பொன்னாலை ஸ்ரீ கண்ணன் சனசமூக நிலையத்திற்கு பிளாஸ்டிக் கதிரைகள் ஒரு தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ்மாவட்ட அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதனினால் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.
சனசமூக நிலைய கோரிக்கைக்கு அமைவாக இவ்வாண்டிற்கான தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து சுமார் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கதிரைகளை பாராளுமன்ற உறுப்பினர் இதன் போது வழங்கி வைத்தார் .
மேலும் இப்பிரதேச மக்களின் அபிவிருத்தில் இயன்றளவு உதவிகளை அரசாங்கத்திடம் இருந்து பெற்று தருவதாக குறிப்பிட்டார்.