பாறுக் ஷிஹான்-
புங்குடுதீவு பாடசாலை மாணவி சி. வித்தியாவின் வழக்கு விசாரணைகள் இம் மாத இறுதிப் பகுதியில் மேல் நீதிமன்றத்துக்கு மாற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிவான் வை.எம் எம்.றியாழ் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (4) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் மேற்கண்டவாறு கூறினார்.
குறித்த மாணவி படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட 12 சந்தேகநபர்களுக்கும் எதிரான வழக்கு விசாரணைகள் ஊர்கவால்துறை நீதிமன்றில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் மேற்படி வழக்கு எதிர்வரும் 18 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.