எம்.எம்.ஜபீர்-
சம்மாந்துறை பிரதேசத்தில் இவ்வருடம் கா.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுகளின் அடைவு மட்டத்தினை முன்னேற்றும் நோக்கில் இலவச கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரின் அனுசரணையில் சம்மாந்துறை கல்வி மற்றும் கலாச்சார அபிவிருத்திக்கான நலன்புரி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறையில் மூன்று பாடசாலைகளில் நடைபெற்றுவருகின்றது.
இதில் முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம், அல்-அர்சத் மகா வித்தியாலயம், அல்-மர்ஜான் மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கடந்த 23ஆம் திகதி ஆரம்பமான கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி நிறைவடையவுள்ளது.
இதன்போது கல்வி வழிகாட்டல் கருத்தரங்கில் இன்று சனிக்கிழமை கணிதப் பாட கருத்தரங்கு நடைபெறுவதை பார்வையிட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் விஜயம் மேற்கொண்டு மாணவர்களிடம் கருத்தரங்கு தொடர்பாக கேட்டரிந்துகொண்டார்.