பாறுக் ஷிஹான்-
இரண்டு கிலோகிராம் கஞ்சா பொதியை யாழில் இருந்து கொழும்புக்கு கடத்த முயன்ற நபரை நேற்று புதன்கிழமை (05) யாழ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொழும்புக்கு எடுத்துச் செல்வதற்காக சங்கானைப் பகுதியிலிருந்து கஞ்சா பொதியொன்று பஸ்ஸில் கைமாற்றப்படுவதாக கிடைக்கப்பபெற்ற தகவலை அடுத்து குறித்த பஸ்ஸை மறித்துச் சோதனை செய்த பொலிஸார் அச்சந்தேகநபரைக் கைது செய்தனர்.
சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணையில் குறித்த கஞ்சா பொதியை கொழும்பிலுள்ள தனது நண்பருக்கு கொடுப்பதற்காக எடுத்துச் சென்றதாகக் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபரைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்