பொத்துவில் ஹெடஓயா நீர்ப்பாசனத் திட்டம் சம்பந்தமான உயர்மட்டக் கலந்துரையாடல்

ஹாசிப் யாஸீன்-

பொத்துவில் ஹெடஓயா நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டம் சம்பந்தமான கலந்துரையாடல் விளையாட்டுத்துறை பிரதிஅமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையிலான குழுவினருக்கும், பொருளாதார, திட்டமிடல் அமைச்சின்செயலாளர் ஏ.எம்.றபீக்கிக்குமிடையில் நேற்று (29) சனிக்கிழமை பொருளாதார, திட்டமிடல் அமைச்சில்இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது, பொத்துவில் ஹெடஓயா நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டத்தினை அமுல்படுத்துதல் மற்றும்அதற்கான நிதி மூலங்களை கண்டறிதல் பற்றி விரிவாக ஆராயப்பட்டதுடன் இதனால் மக்கள் எதிர்நோக்கும்பிரச்சினைகள் பற்றியும் பிரதி அமைச்சர் ஹரீஸ் அமைச்சின் செயலாளருக்கு விளக்கமளித்தார். 

இச்சந்திப்பில் பொத்துவில் ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி ஆதம்லெவ்வை உள்ளிட்டஹெடஓயா நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்ட குழுவினரும் கலந்து கொண்டனர்.

இதன்போது பிரதி அமைச்சர் ஹரீஸ்,

பொத்துவில் மக்கள் மிக நீண்ட காலமாக தேவையாகவுள்ள ஹெடஓயா நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டத்தினைஇந்த நல்லாட்சி அரசில் நிறைவேற்றக் கூடிய சாத்தியங்கள் உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை முஸ்லிம்காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மேற்கொண்டுள்ளதுடன் இதற்கான அனுமதியினைநீர்ப்பாசன அமைச்சர் விஜயமுனி சொய்ஸா வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஹெடஓயா நீர்ப்பாசனத் திட்டத்தினை அமுல்படுத்துவதன் மூலம் பொத்துவில் மக்களினால் நீர்ப்பாசனமின்றிகைவிடப்பட்டுள்ள வயற்காணிகள் நெற் செய்கைக்கு உற்படுத்த முடிவதோடு அம்மக்களின் வாழ்வாதாரத்தில்முன்னேற்றத்தையும் ஏற்படுத்தலாம் எனவும் தெரிவித்தார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -