அகமட் எஸ். முகைடீன், ஹாசிப் யாஸீன்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதிஅமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் சம்மாந்துறை பிரதேசசெயலகத்திற்குட்பட்ட செந்நெல் கிராம வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கும்நிகழ்வு நேற்று (19) புதன்கிழமை சம்மாந்துறை செந்நெல் கிராம பெண் நண்பிகள் அமைப்பின்அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் சம்மாந்துறைசெந்நெல் கிராமத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்ப பெண்கள் ஒரு பகுதியினருக்குதையல் இயந்திரம் உள்ளிட்ட தையல் உபகரணங்கள் வழங்கி வைத்தார்.
குறித்த கிராமத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் ஏனைய குடும்ப பெண்களுக்கும்எதிர்வரும் ஜனவரி மாதமளவில் சுய தொழிலை மேற்கொள்வதற்கு ஏதுவாக தையல்இயந்திரம் உள்ளிட்ட தையல் உபகரணங்கள் மேலும் வழங்கிவைக்கப்படும் எனவிளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் இதன்போது தெரிவித்தார்.
இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர்ஏ. பாவா, எம்.தௌபீக் மற்றும் சம்மாந்துறை செந்நெல் கிராம பெண் நண்பிகள் அமைப்பின்தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.