இளம் மாதர் முஸ்லிம் சங்கம் ஏற்பாடு செய்த விதவையருக்கு தையல் மெஷின்கள் மற்றும் சமையல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இளம் மாதர் முஸ்லிம் சங்க தலைவி தேசமான்ய மக்கியா முஸம்மில் தலைமையில் கொழும்பு தெமட்டகொடை வீதியிலுள்ள அகில இலங்கை வைஎம்எம்ஏ இயக்க தலைமையகத்தில் நடைபெற்றது.
கொழும்பு மாத்திரமன்றி கண்டி நீர்கொழும்பு கம்பளை போன்ற பல பகுதிகளைச்சேர்ந்த இளம் விதவையர் பலருக்கு இந்த நிகழ்வின் போது மெஷின்கள் மற்றும் சமையல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
கலாநிதி ஹரீஸ்தீனின் பாரியாரான கைரியா ஹரீஸ்தீன்- இளம் மாதர் முஸ்லிம் சங்க தலைவி தேசமான்ய மக்கியா முஸம்மில் -சங்க செயலாளரான தேசமான்ய மர்ளியா சித்தீக் -பொருளாளரான தேசமான்ய பவாஸா தாஹா -அகில இலங்கை வைஎம்எம்ஏ இயக்க முன்னாள் தலைவரான காலித் பாரூக் உட்பட சங்க உறுப்பினர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர் .
விதவையருக்கு தமது வீட்டிலிருந்தே பொருளாதாரத்தை மேப்படுத்துமுகமாக சுய வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் நல் நோக்கத்துடன் கட்டாரில் இயங்கும் சிறிலங்கா முஸ்லிம் மஜ்லிஸ் மற்றும் அல்-ஹுதா பவுன்டேஷன் ஆகியவற்றின் அனுசரனையுடன் இளம் மாதர் முஸ்லிம் சங்கம் - இந்த தையல் மெஷின்களையும் மற்றும் சமையல் உபகரணங்களையும் வழங்கிமை இங்கு குறிப்பிடத்தக்கது.
தகவல்:- நூருல் அயின் நஜ்முல் ஹுசைன்,
(ஊடக இணைப்பாளர் -YWMA)