கனேடிய உயரிஸ்தானிகர் ஆலயத்தினால் கடந்த மூன்று வருடத்துக்கு முன்னர் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களின் ஆற்றல்களை மேம்படுத்தும் வேலைத்திட்டம்ஒன்றை கனடா செயற்படுத்தி இருந்தது. கனேடிய உயர் ஸ்தானிகர் திருமலை ஊடக சங்கத்தினரை இன்று (25)
ரின்க்கோ ப்ளூ ஹோட்டலில் சந்தித்து கலந்துரையாடியதுடன் . சமகாலத்தில் ஊடகவியலாளர்கள் சந்திக்கும் சவால்கள் பிரச்சினைகள் பற்றியும் ஆராய்ந்தனர்.
மேலும் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்திற்கு பயிற்சிகள் மற்றும்பௌதீக தேவைகள் பற்றியும் இதன்போது பேசப்பட்டன .கனேடிய உயர் ஸ்தானிகர் செலி வயிட்டிங், மற்றும் பொருளாதார அரசியல் ஆலோசகர் ஜெனிபர் ஹார்ட் ஆகியோர் ஊடகவியலாளர் சங்கத்தின் நிருவாக உறுப்பினர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.