இறக்காமம் சிலைவைப்பு சிறுபான்மையினரை அச்சுறுத்தும் செயல் - முதலமைச்சர் கண்டனம்

சிறுபான்மையினரை அச்சுறுத்தும் செயற்பாடுகள் நல்லாட்சியிலும் முன்னெடுக்கப்படுகின்றதா..? என்ற சந்தேகம் தோன்றியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

இறக்காமம் மாணிக்கமடு பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மேற்கண்டவாறு கூறினார்.

இவ்வாறு தமிழ் முஸ்லிம் மக்கள் பாரம்பரியமாக வாழும் இடங்களில் புத்தர் சிலைகளை வைத்து அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிக்கும்செயற்பாடுகள் திட்டமிட்ட வகையில் மேற்கொள்வது கண்டிக்கத்தக்க விடயமாகும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் அம்பாறை மாவட்ட நல்லாட்சியில் அங்கம் வகிக்கும் பெரும்பானமையின அரசியல்வாதிகள் மௌனம் சாதிப்பது மக்கள் பிரதிநிதிகளான அவர்களின் நேர்மை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாக முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.

தமிழ் முஸ்லிம் மக்கள் அனைவருடனும் அமைதியாகவும் சமாதானமாகவும் வாழவே விரும்புவதாகவும் தமது அரசியல் சுயலாபத்திற்காக அதனை சீர்குலைக்க விரும்பும் சிலரே இவ்வாறான சதி நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சியாளர்களின் மறைமுக சக்திகள் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்து நல்லாட்சி மீதான சிறுபான்மையினரின் நம்பிக்கைகளை சீர் குலைக்க முற்படுவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -